தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம் சரண், தனது 16வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக “RC 16” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார்.

இது, ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் முதல் முறையாக இணையும் படம் என்பதால், ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் புச்சி பாபு இயக்க, ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். தற்போது, படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ராம் சரண், அடுத்ததாக ஒரு புராணக் கதையில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, பிரபல பாலிவுட் இயக்குநர் நிகில் நாகேஷ், ராம் சரணுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் என கூறப்படுகிறது. இந்த இயக்குநர், 2023ஆம் ஆண்டு வெளியான “Kill” திரைப்படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.