Wednesday, February 12, 2025

என் பாடல்களுக்கு நான் காப்பிரைட் கேட்கமாட்டேன்… தேனிசை தென்றல் தேவா டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1980களின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, 1990களிலும் 2000களின் தொடக்கத்திலும் முன்னணி இசையமைப்பாளராகத் திகழ்ந்தவர் தேவா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தற்போதும் அவரது இசை பல புதிய படங்களில் ரீமிக்ஸ் செய்யப்பட்டும், பின்னணி இசையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, காப்பி ரைட்ஸ் விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், தேவா தன் பாடல்களை பயன்படுத்தினால் அதற்காக எந்தவிதமான காப்பி ரைட்ஸ் கோரப்படாது என்று தெரிவித்துள்ளார்.

ஒரு ஊடகத்திற்குக் கொடுத்துள்ள பேட்டியில், “தற்போதைய இயக்குநர்கள், என்னுடைய பாடல்களை அவர்களின் படங்களில் பயன்படுத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது மூலம் நான் இளம் தலைமுறை ரசிகர்களுடன் இணைந்து இருப்பதை உணர முடிகிறது” என்று தெரிவித்தார்.மேலும், “என்னுடைய பாடல்களை இன்றைய 2K குழந்தைகள் ரசிப்பதே எனக்குப் பெருமை. இந்த ரசனைக்கு முந்தைய எந்த பணத்தாலும் ஈடு செய்ய முடியாது” என்று உருக்கமாக கூறினார்.

- Advertisement -

Read more

Local News