2022ஆம் ஆண்டில் வெளியான “சுழல்” தமிழ் வெப் தொடரை பிரம்மா மற்றும் அனுச்சரண் முருகையா இணைந்து இயக்கினர். விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் – காயத்ரி இந்த தொடரின் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளனர். இதில் கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157529-819x1024.jpg)
குற்றம் மற்றும் திரில்லர் கலந்த இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது “சுழல்” தொடரின் இரண்டாம் பாகம் உருவாகி முடிந்துள்ளது. இதில் கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். அவர்களுடன் மஞ்சிமா மோகன் மற்றும் கயல் சந்திரன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157528-819x1024.jpg)
இந்த தொடர் இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. “சுழல் 2” தொடரை பிரம்மா மற்றும் சர்ஜுன் கே.எம் இணைந்து இயக்கியுள்ளனர். இவர்கள் இதற்கு முன்பு “தியோர் டெக்ஸ்” வெப் தொடரின் இரண்டாம் சீசனை இயக்கியவர்கள். “சுழல் 2” தொடரின் ட்ரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், இந்த வெப் தொடர் பிப்ரவரி 28ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.