நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை பார்த்த மாரி செல்வராஜ் அவரது கருத்தை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன்படி, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தைப் பார்த்தேன். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு வழக்கமான காதல் கதையை திரையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இந்த வழக்கமான காதல் கதையில் தனுஷ் உருவாக்கியிருக்கும் உலகம் என்னை மிகவும் குதூகலப்படுத்தியது. இந்த குதூகலமும், உற்சாகமும் படத்தை திரையரங்குகளில் பார்க்கும் அனைவருக்கும் கிடைக்கும் என நினைக்கிறேன். வாழ்க்கையின் அதீத மகிழ்ச்சிகள் அனைத்தும் காதல் என்ற அப்பாவிதனத்தால் தான் கிடைக்கிறது. இயக்குனர் தனுஷூக்கு எனது வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
![1000157017](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157017-696x390.png)
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more