முழுமையாக வட்டமான கண்களுடன், மான் விழியை போன்ற பார்வையுடன், செஞ்சு வைத்த சிலையைப் போல் அழகாக இருந்தவர் ஷிவானி நாராயணன். அவர் ‘பகல்நிலவு’ சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். முதல் தொடரிலேயே தனது அழகும் திறமையான நடிப்பும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. தொடர்ந்து பல சீரியல்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றிய அவர், பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு மிகப்பெரிய பிரபலமடைந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த உடனே, திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய ஷிவானிக்கு ரசிகர்கள் அதிக ஆதரவை வழங்கினர். அவரை தொடர்ந்து ஆதரிக்க, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் லைக்குகளை மழைக்கச் செய்தனர். இதனால், சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கவனம் செலுத்திய ஷிவானி, அதற்காக உடல் எடை குறைக்கத் தொடங்கி, ஜிம் செல்லுதல், மாடலிங், கவர்ச்சியான போட்டோஷூட் என தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றிக்கொண்டார்.
எனினும், ஒருகட்டத்தில் அழகாக இருக்க வேண்டும் என்ற அவரது முயற்சிகள் எதிர்மாறாக செயல்படத் தொடங்கின. அவரின் முக அழகு மெல்ல மாற ஆரம்பித்தது. இதைப் பார்த்த ரசிகர்கள் “ஷிவானி முகத்திற்கு எதாவது ஆபரேஷன் செய்தாரா?” என சந்தேகிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில், அண்மையில் வெளியிட்ட அவரது புகைப்படங்களில் முகத்தின் தோற்றம் முற்றிலும் மாறிவிட்டதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒருகாலத்தில் ஷிவானியின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுக்காக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களே, இப்போது “ஷிவானி இப்படி மாறிவிட்டாரே!” என வருத்தத்துடன் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.