மீனவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி கடல் பின்னணியில் வெளியான படம் தண்டேல். மீன் பிடிப்பதற்காக எல்லை தாண்டும் ஆந்திர மீனவர்கள் சிலர் பாகிஸ்தான் கடற்படையாள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். நாயகன் நாகசைதன்யா உள்ளிட்டவர்கள் எப்படி அங்கிருந்து மீண்டு வருகிறார்கள் என்பது மையப்படுத்தி தான் இந்த கதை உருவாகியுள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள கடல் பகுதியில் நடைபெற்றபோது அங்கே ரோந்து வந்த கேரள கப்பற்படை அதிகாரிகள் தண்டேல் படக்குழுவினரை கைது செய்து அழைத்துச் சென்றனராம். அதன் பிறகு அவர்களை விசாரித்து விடுவித்துள்ளனர். இந்த தகவலை சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நாகசைதன்யா தெரிவித்துள்ளார்.
![1000155847](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000155847-e1739010159780-696x294.jpg)
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more