வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி விநியோகிக்கும் யுனிவர்சல் பிக்சர்ஸின் “ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்” திரைப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியானது. உலகம் முழுவதும் உள்ள ஜுராசிக் பார்க் ரசிகர்கள், இந்த புதிய படத்தின் மூலம், மீண்டும் தங்களுக்குப் பிடித்த உலகத்துக்குள் நுழையவிருக்கிறார்கள் என்பதில் உற்சாகமாக உள்ளனர்.
பிரபல பாஃப்டா விருது பெற்ற கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள இந்த ஆக்ஷன்-அட்வென்ச்சர் திரைப்படத்தில், அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்கார்லெட் ஜோஹன்சன், எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றும் ஆலிவர் விருது வென்ற ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி, லூனா பிளேஸ், ரூபர்ட் ஃப்ரெண்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிரெய்லர், பார்வையாளர்களை வரலாற்றுக்கு முந்தைய ஜுராசிக் உலகத்திற்கு அழைத்து செல்கிறது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000156123.jpg)
இந்த திரைப்படத்தின் கதை “ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன்” படத்திற்குப் பிறகு நடக்கிறது. மீதமுள்ள டைனோசர்கள், தனிமைப்படுத்தப்பட்ட ஒரு இடத்தில் தங்களது இனத்தை பெருக்கிக்கொண்டிருக்கின்றன. அந்த சூழலில், மிகப் பிரம்மாண்டமான மூன்று டைனோசர்கள், மனித இனத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும் ஒரு மருந்தின் திறவுகோலை கொண்டிருக்கின்றன.இதில், ஜொனாதன் பெய்லி தொல்லுயிரியலாளர் டாக்டர் ஹென்றி லூமிஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்கார்லெட் ஜோஹன்சன் ஒரு திறமையான இரகசிய செயல்பாட்டு நிபுணராக ஜோரா பென்னட் வேடத்தில் நடித்துள்ளார். அவர், உலகின் மூன்று பெரிய டைனோசர்களிடமிருந்து மரபணுப் பொருளை பாதுகாக்கும் ஒரு உயர் ரகசிய பணிக்காக ஒரு திறமையான குழுவை வழிநடத்துகிறார்.
இது ஒரு குடும்பத்தையும் பாதிக்கிறது. எதிர்பாராத விதமாக, அவர்கள் ஒரு தீவில் சிக்கித் தவிக்கின்றனர். அங்கு, உலகத்திலிருந்து பல தசாப்தங்களாக மறைக்கப்பட்ட ஒரு அதிர்ச்சி தரும் கண்டுபிடிப்பை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.2 நிமிடம் 25 வினாடிகள் கொண்ட டிரெய்லர், அதிகமான ஆக்ஷன், சாகசங்கள் மற்றும் அறிவியல் திருப்பங்களுடன் உள்ளது. இந்த “ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்” திரைப்படம் ஜூலை 4, 2025 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.