Saturday, February 8, 2025

சூர்யாவின் ரெட்ரோ படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய டி-சீரிஸ்! #RETRO

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூர்யாவின் 44வது திரைப்படம் “ரெட்ரோ” என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இதை சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்

இதில், சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பதற்கான தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க, முக்கியமான பாத்திரங்களில் ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் காதல் கதையம்சத்துடன் நிறைய ஆக்ஷன் காட்சிகள் உள்ள படமாக உருவாகியுள்ளது என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு பாடலுக்காக நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.ரெட்ரோ” திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஆடியோ உரிமையை டி-சீரிஸ் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி டீசர்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. இப்படத்தின் முதல் பாடலும் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News