வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக தன்னை பதிவு செய்து கொண்டவர் நதியா. இவர் மலையாளத்தில் முதன்முறையாக இயக்குனர் பாசில் இயக்கத்தில் 1984ல் நோக்கத்த தூரத்து கண்ணும் நட்டு என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.பாட்டிக்கும் பேத்தியும் பாசப்பிணைப்பை வெளிப்படுத்தி உருவான முதல் படம் என்று கூட இதை சொல்லலாம். தனது முதல் படத்திலேயே மோகன்லால் மற்றும் பத்மினி போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்ற நதியா இந்த பிப்ரவரி மாதத்தில் தனது 40 வருட திரையுலக பயணத்தை வெற்றிகரமாக கடந்துள்ளார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more