Wednesday, February 5, 2025

சிக்கந்தர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க மிகப்பெரிய சம்பளம் என உலாவும் தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சத்யராஜ், ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். பின்னர், குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். சமீப காலமாக, தமிழை மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பல முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்த தொடரில், பிரபல இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் தற்போது ஹிந்தியில், நடிகர் சல்மான் கானை வைத்து ‘சிக்கந்தர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜும் நடிக்கிறார்

இந்த படத்திற்காக, சத்யராஜுக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் இணைந்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News