Tuesday, February 4, 2025

மூன்று வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்ட மனிதர்களின் சந்திப்பு… நேரடியாக ஓடிடியில் வெளியாகும் டெஸ்ட்!!!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள டெஸ்ட் படத்தை, பிரபல தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கியுள்ளார். தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்த அவர், தற்போது இயக்குநராக தனது முதல் படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்திற்கு பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைத்துள்ளார். இதன் மூலம் அவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “மூன்று வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்ட மனிதர்கள், கிரிக்கெட்டின் வரலாற்றில் முக்கியமான ஒரு போட்டியில் ஒன்று கூடும் போது, அது அவர்களின் வாழ்க்கையில் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலை உருவாக்குகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாழ்க்கை ஒரு விளையாட்டைப் போன்றது. வாழ்க்கைப் பயணத்தில் மனிதர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன? ஒருவரது கனவுகள், ஆசைகள், முயற்சிகள் எவ்வாறு வெற்றியடையுகின்றன? என்பதைக் கிரிக்கெட்டின் மூலமாக காட்சிப்படுத்துவதே இப்படத்தின் கதையம்சமாகும். மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் மற்றும் பலர் தங்கள் சிறப்பான நடிப்பால் கதையின் உணர்வுகளை தீவிரமாக வெளிப்படுத்தியுள்ளனர். காதல், கனவு, லட்சியம், விருப்பம் மற்றும் கிரிக்கெட் ஆகிய அனைத்தும் இணைந்து, இந்த படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. “உலகளவில் மிக வலுவான ஒரு கதையம்சத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தை, ரசிகர்களுக்கு வழங்குவதில் பெருமை அடைகிறோம்” என நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News