Tuesday, February 4, 2025

இனி மலையாளத்திலேயே தனது திரைப்பயணத்தை தொடரவுள்ளாரா இயக்குனர் கௌதம் மேனன்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தனது ஸ்டைலிஷான படங்களின் மூலம் தனித்துவமான முத்திரை பதித்து வந்தவர் கவுதம் மேனன். அவர் இயக்கிய படங்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றாலும், தயாரிப்பாளராக மாறியதற்குப் பிறகு அவரது திரைப்படங்கள் பெரும் தாமதத்திற்குள்ளாகி, பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த பிறகே திரையரங்குகளில் வெளியாகின்றன. அந்த வகையில், விக்ரம் நடிப்பில் இயக்கிய துருவ நட்சத்திரம் படம், கடந்த ஆறு ஆண்டுகளாக வெளிவர முடியாமல் பின்னோக்கி தள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மலையாள சினிமாவில் முதன்முறையாக கால் பதித்த கவுதம் மேனன், மம்முட்டியுடன் இணைந்து டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் படத்தை இயக்கினார். இந்த படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. கவுதம் மேனன் இதுவரை இயக்கிய படங்களிலேயே மிகக் குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்து வெளியான முதல் படம் இதுவாகும்.

மேலும், மலையாள திரையுலகில் நடிகராகவும் தனது பயணத்தைத் தொடங்கியுள்ள அவர், அடுத்ததாக மோகன்லால், பிரித்விராஜ், டொவினோ தாமஸ் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து தொடர்ந்து மலையாளத்தில் படங்களை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கடந்த சில வருடங்களாக அவருக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதால், தற்போது தமிழில் ஒரு பெரிய நடிகருடன் படம் இயக்கும் வாய்ப்பு அவருக்கு குறைவாகவே உள்ளது. எனவே, இனி சில ஆண்டுகள் மலையாள திரையுலகில் கவனம் செலுத்தலாம் என முடிவு செய்திருக்கிறார் கவுதம் மேனன்.

- Advertisement -

Read more

Local News