மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான், கடைசியில் லக்கி பாஸ்கர் என்ற படத்தில் நடித்தார். இந்த படமானது ரூ.100 கோடி க்கும் மேலாக வசூல் செய்து ஒரு சாதனை படைத்தது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000154044-819x1024.jpg)
அடுத்த படமாக, துல்கர் சல்மான் மற்றும் ராணா டகுபதி இருவரும் காந்தா என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இவர் ‘தி ஹண்ட் பார் வீரப்பன்’ மற்றும் நிலா போன்ற படங்களை இயக்கியவர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000154085.png)
இந்த படத்தில் ‘மிஸ்டர் பச்சன்’ திரைப்பட புகழ்பெற்ற பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானின் ஜோடியாக நடிக்கின்றார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகப்போகின்றது.இந்த படத்தை வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா இணைந்து தயாரிக்கின்றன. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.