திரைப்படத்துறையில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழ்த் திரைப்படங்களில் அவ்வப்போது நடித்து வந்தாலும், தற்போது ஹிந்தித் திரைப்பதியிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில், இயக்குநர் ராஜ் நிடிமொருவுடன் அவருக்கிடையே காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் பரவிவருகின்றன.
முன்னதாக, நடிகர் நாக சைதன்யாவுடன் காதலில் இருந்த சமந்தா, அவருடன் விவாகரத்து பெற்றார். சில மாதங்களுக்கு முன்பு, நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபலாவைத் திருமணம் செய்துகொண்டார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நல பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த சமந்தா, தற்போது சற்றே தேறியுள்ளார்.
இயக்குநர் ராஜ் நிடிமொரு மற்றும் கிருஷ்ணா டி.கே இணைந்து ‘ராஜ்-டிகே’ என்ற பெயரில் சில வெற்றி பெற்ற திரைப்படங்களையும், ‘பேமிலி மேன், பார்சி, சிட்டாடல்: ஹன்னி பன்னி’ போன்ற வெப் தொடர்களையும் இயக்கியுள்ளனர். குறிப்பாக, ‘பேமிலி மேன்’ மற்றும் ‘சிட்டாடல்: ஹன்னி பன்னி’ வெப் தொடர்களில் சமந்தா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பின்போது சமந்தாவுக்கும் ராஜ் நிடிமொருவிற்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், சமந்தா ‘பிக்கல்பால்’ என்ற விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘வேர்ல்ட் பிக்கல்பால் லீக்’ போட்டியில் சென்னை அணியின் உரிமையாளராக உள்ளார். சமீபத்தில் மும்பையில் நடந்த போட்டிகளுக்கு சமந்தா மற்றும் ராஜ்-டிகே இருவரும் இணைந்து வந்த நிலையில், அவர்களுக்கிடையிலான காதலா என்றெல்லாம் விவாதங்கள் எழ தொடங்கியுள்ளன.