Friday, January 31, 2025

அஜித் சாருக்கு முதல்ல வாழ்த்து சொன்னதே விஜய் சார் தான்… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், ‘துணிவு’ படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இதில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ், படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் வருகிற 6-ம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான ‘விடாமுயற்சி’ படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், அஜித் துபாய் ரேஸில் வென்ற போதும் சரி அதேபோல் பத்ம பூஷன் விருது வென்ற போதும் சரி திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பல தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில் தளபதி விஜய் வாழ்த்து சொல்லவில்லை என நீண்ட நாட்களாக தகவல்கள் உலாவிய வண்ணம் விவாதங்களுடன் இருந்தன. இந்நிலையில் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், அஜித் சார் ரேஸில் வெற்றி பெற்றவுடன், விஜய் சாரிடமிருந்து முதல் வாழ்த்து வந்தது. அதே மாதிரி, அஜித் சாருக்கு ‘பத்மபூஷன்’ விருது அறிவிக்கப்பட்டபோது, விஜய் சாரும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர்களிருவருக்கும் ஆழமான மற்றும் உண்மையான நட்பு உள்ளது. எனவே, விஜய் சார் வாழ்த்து சொல்லவில்லை என்பது கொஞ்சம் கூட எந்தவிதமான உண்மையும் இல்லை என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News