Wednesday, January 29, 2025

என்னது எனக்கு அந்த நடிகருடன் திருமணமா ? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை அபிநயா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரைப்படத்துறையில் “நாடோடிகள்” திரைப்படத்தின் மூலம் நடிகை அபிநயா தனது திரை உலக பயணத்தை தொடங்கினார். அந்தப் படத்தில், சசிக்குமாரின் தங்கை மற்றும் விஜய் வசந்தின் ஜோடி என்ற கதாபாத்திரங்களை அவர் சிறப்பாக ஏற்றிருந்தார். “நாடோடிகள்” படத்தின் வெற்றியை தொடர்ந்து, “ஈசன்”, “ஏழாம் அறிவு”, “வீரம்”, “தனி ஒருவன்”, “தாக்க தாக்க”, “ஆயிரத்தில் ஒருவன்” உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவர் நடித்தார்.

இந்நிலையில், நடிகர் விஷாலுடன் திருமணம் செய்யப் போவதாக பரவிய வதந்திகளுக்கு நடிகை அபிநயா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அபிநயா, விஷாலுடன் “பூஜை” மற்றும் “மார்க் ஆண்டனி” திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில், விஷால், அபிநயாவை திருமணம் உள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் அபிநயா, இந்த தகவல் முற்றிலும் பொய்யானது எனவும், விஷாலுடன் எந்த விதமான தொடர்பும் இல்லையெனவும் தெளிவுபடுத்தினார். மேலும், தனது பள்ளி வாழ்க்கையில் இருந்து 15 ஆண்டுகளாக தொடர்பில் இருக்கும் நண்பரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News