Monday, January 27, 2025

கமல் சாரிடம் சிபாரிசு கடிதம் கேட்டேன் அவர் நோ சொல்லிவிட்டார்… நடிகை அபிராமி சொன்ன சுவாரஸ்யமான தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை அபிராமி கமல்ஹாசன் இயக்கி நடித்த ‛விருமாண்டி’ படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர். அந்த ஒரு படத்திலேயே அவர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். அதன் பின்னர், பல படங்களில் அவர் கதாநாயகியாக நடித்துள்ளார். சில வருடங்கள் நடிப்பில் இருந்து விலகிய பிறகு, தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் முக்கியமான பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், ‛வேட்டையன்’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்ததோடு, மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்து ‛தக் லைப்’ படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது, ‛‛விருமாண்டி’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயம், நான் சைக்காலஜி மற்றும் கம்யூனிகேஷன் கோர்ஸ் படிப்பதற்காக அமெரிக்காவின் ஓகியாவில் உள்ள வூஸ்டர் காலேஜில் சேர வேண்டும் என தீர்மானித்தேன். அங்கு சேருவதற்கு ஒரு பிரபலமான ஒருவரின் சிபாரிசு கடிதம் இருந்தால் அது உதவும் என நினைத்தேன். அந்த நேரத்தில் பிரபல எழுத்தாளர் மற்றும் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் எனக்கு சிபாரிசு கடிதம் வழங்கினார்.

அதே நேரத்தில், விருமாண்டி படப்பிடிப்பில் கமல்ஹாசனுடன் நடிக்கும்போது, அவரிடம் நான் ஒரு சிபாரிசு கடிதம் கேட்டேன். ஆனால் கமல்ஹாசன், சிபாரிசு கடிதம் தர முடியாது என்றும், சினிமாவை விட்டு நீ செல்ல வேண்டாம் என்றும், உனக்கு இங்கு சிறந்த எதிர்காலம் இருப்பதற்கான காரணங்களைச் சொல்லினார். விருமாண்டி படப்பிடிப்பு முடிந்த பிறகு, எனக்கு அந்த காலேஜில் அட்மிஷன் கிடைத்தது. அதனால், நான் அமெரிக்கா சென்று படிப்பை தொடர்ந்தேன். இந்த படிப்பு ஒரு நாள் முன்னெடுப்பாக எடுத்த முடிவல்ல, இது என் நீண்ட நாளைய கனவு’’ என்று அபிராமி பகிர்ந்துகொண்டார்.

- Advertisement -

Read more

Local News