Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

சிம்புவின் பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு காத்திருக்கும் திரை விருந்து… அப்டேட்களுக்கு ஒரு அப்டேட் கொடுத்த சிம்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிலம்பரசன் தற்போதைய ‛தக் லைப்’ படத்தை முடித்துவிட்டு சுதந்திரமாக சுற்றுலா சென்று ரிலாக்ஸ் ஆகி வருகிறார். அடுத்ததாக, தேசிங்கு பெரியசாமி மற்றும் அஸ்வந்த் மாரிமுத்து ஆகியோரின் இயக்கத்தில் புதிய படங்களில் நடிக்க இருக்கிறார்.

இதற்கிடையில், குறுகிய காலத்துக்குள் ‛பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் பிப்ரவரி 3ம் தேதி, சிம்புவின் பிறந்த நாளையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிம்புவும் அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் அப்டேட் என பதிவிட்டு அவரது அடுத்த படங்களின் அப்டேட்கள் வெளியாகும் என உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‛டிராகன்’ படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். அந்த பாடலின் ப்ரோமோ சமீபத்தில் வெளியிடப்பட்டு வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News