Saturday, January 25, 2025

பாலய்யாவுக்கு ஜோடியாகும் தனுஷ் பட நடிகை… இதுதான் கதைக்களமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் பாலையா. அவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மாபெரும் சாதனை படைத்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு, போயபதி சீனு இயக்கத்தில் உருவான ‘அகண்டா’ திரைப்படத்தில் நடித்தார். இந்த படம், 2021ஆம் ஆண்டு தெலுங்கில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக அமைந்தது. இதில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதுடன், முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணியாற்றுகின்றனர். இந்தப் படத்துக்கு தமன் இசையமைப்பார்.

இப்படம் செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள கும்பமேளா பின்னணியை கொண்டு இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதே நேரத்தில், இப்படத்தில் கதாநாயகியாக நடிகை சம்யுக்தா மேனன் இணைந்துள்ளார். மலையாள திரைப்படங்களில் புகழ்பெற்ற அவர், தமிழில் ‘வாத்தி,’ தெலுங்கில் ‘டெவில்,’ ‘விஷ்வாம்பர பிம்பிசாரா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News