Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

மலையாள சினிமாவில் மோஸ்ட் வான்டட் பிரபலமாக அவதாரம் எடுத்துள்ள பாசில் ஜோசப்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநராக துவங்கி பின்னர் நடிகராக உருவெடுத்து ஜொலித்தவர்கள் திரையுலகில் பலர் உள்ளனர். அந்த வரிசையில் தற்போது முக்கியமான இடத்தை பிடித்து அமர்ந்திருக்கிறார் மக்களின் சினேகத்திற்கு உரிய சேட்டன் பேசில் ஜோசப்.

சினிமா மேல் இருந்த அதிக ஆர்வத்தால், ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்க தொடங்கினார் பேசில் ஜோசப். அதற்கு மேலாக சில குறும்படங்களில் நடித்தும் இருந்தார். 2012 ஆம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார் பேசில். பின்னர் வேலைக்கு ராஜினாமா செய்து, இயக்குநர் வினீத் ஶ்ரீனிவாசனிடம் உதவி இயக்குநராக சேர்ந்து சினிமாவை கற்றார். அதே ஆண்டில், மற்றொரு படத்திலும் உதவி இயக்குநராக இருந்தபோது, ஒரு சிறிய கெஸ்ட் ரோலில் நடித்து அறிமுகமானார்.

பேசில் ஜோசப் 2015 ஆம் ஆண்டு தன்னுடைய முதல் படமான குஞ்சிராமாயணம்’ திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் தனது குருவான வினீத் ஶ்ரீனிவாசனை வைத்து கதாநாயகனாக நடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News