நடிகை சுனைனா தமிழில் “காதலில் விழுந்தேன்”, “மாசிலாமணி”, “சமர்”, “லத்தி”, “நீர் பறவை”, “வம்சம்” போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவை தவிர, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். சுனைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கஜினி படம் அவருக்கு ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
அதில், “நான் தமிழ் திரையுலகத்தில் நுழைந்தபோது, மொழி தெரியாமலேயே பல தமிழ் படங்களைப் பார்த்தேன். அதில் கஜினி படம் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சினிமாவில் ஒரு கதையின் தாக்கத்தை உணர மொழி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
அதுதான் சினிமாவின் சக்தி. கஜினி திரைப்படம் என் மனதில் தனி இடத்தை பிடித்ததற்கு எண்ணற்ற காரணங்கள் உண்டு. தமிழ் சினிமாவின் அழகை இந்த படம் எனக்கு அறிமுகப்படுத்தியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.