கேரளாவில் செங்கனூர் பகுதியில் நடைபெற்ற ஒரு கலாச்சார நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மும்பை படப்பிடிப்பிலிருந்து கிளம்பி வந்து கலந்து கொண்டுள்ளார் மோகன்லால். ஆச்சரியமாக இந்த நிகழ்வில் கேரள திரைப்பட மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஷாஜி செரியன் கலந்து கொண்டதோடு, மோகன்லாலை ஒரு மணி நேரம் பேட்டியும் எடுத்திருக்கிறார். ஒரு அமைச்சர் ஒரு நடிகரை பேட்டி எடுப்பது என்பது சினிமா வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கும்.
இந்த பேட்டி எடுத்தது குறித்து அமைச்சர் ஷாஜி செரியன் கூறும்போது, “மும்பை படப்பிடிப்பில் இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே கிளம்பி வந்தார் மோகன்லால். அவர் வந்ததால் இந்த நிகழ்ச்சியே களைகட்டியது. அனைவரும் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்தனர்.
அவர் என்னுடைய ஒவ்வொரு கேள்விக்கும் அழகாக நிதானமாக பதில் அளித்தார். என் கட்சியைச் சேர்ந்த அவரது நண்பரான ஒருவரை பற்றி கேட்ட சில ட்ரிக்கான கேள்விகளுக்கு கூட புத்திசாலித்தனமாக, எச்சரிக்கையாக பதில் அளித்தார்” என்று கூறியுள்ளார்.