தமிழில்”விக்ரம் வேதா,” “இறுதிச்சுற்று,” “மண்டேலா” போன்ற படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம் “TEST”. இதனை சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

முந்தைய காலங்களில், சித்தார்த், மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியோர் மணிரத்னத்தின் “ஆய்த எழுத்து” மற்றும் “ரங் தே பசந்தி” படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.

“TEST” திரைப்படம் டெஸ்ட் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சித்தார்த் ஒரு கிரிக்கெட் வீரராகவும், மாதவன் ஒரு பயிற்சியாளராகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் தற்போது முடிவடைந்து, ரசிகர்கள் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்புக்காக காத்திருந்தனர்.இந்த நிலையில், “TEST” படம் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதத்தின் முதல் வாரத்தில் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.