Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

அவதார் 3 எப்போது வெளியாகும்? ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கொடுத்த அசத்தல் அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான ‘அவதார்’ படத்தின் முதல் பாகம் 2009-ல் வெளியாகி உலகளாவிய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் அடுத்த பாகமான ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ 2022-ல் திரைக்கு வந்தது. தற்போது ‘அவதார்’ படத்தின் மூன்றாம் பாகமான ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ உருவாகி வருகிறது.

இந்த படம் 3 மணிநேரம் 12 நிமிடங்கள் நீளமுடையதாக இருக்கும். இது வருகிற டிசம்பர் மாதம் 19ம் தேதி வெளியிடப்பட உள்ளது. மேலும், நான்காம் பாகம் 2029 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில், ஐந்தாம் பாகம் 2031 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

மூன்றாம் பாகத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்து, தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றன. இரண்டாவது பாகம் நீரின் பின்னணியில் போராட்டங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நிலையில், இந்த மூன்றாவது பாகம் நெருப்பின் பின்னணியில் உருவாகி வருவதால் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News