தெலுங்கு திரையுலகில் கடந்த இரண்டு நாட்களாக சில திரைப்பட தயாரிப்பாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று ‘வாரிசு’ திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் ‘புஷ்பா 2’ திரைப்பட தயாரிப்பாளர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
இன்று ‘புஷ்பா 2’ படத்தின் இயக்குனர் சுகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அப்படத்தின் லாபத்திலிருந்து சில சதவீதம் வருவாய் பெற்றதாகவும், அந்த வருவாய் தொடர்பாக சோதனை நடத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘புஷ்பா 2’ திரைப்படம் மொத்தம் 1800 கோடி ரூபாய் வசூலத்தை கடந்துள்ளது. மேலும், அப்படத்தின் தயாரிப்பாளர் ஹைதராபாத் புறநகரில் பல கோடி ரூபாய்க்கு இடம் வாங்கியதன் பின்னணியிலும் இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘புஷ்பா’ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகியோரின் வீடுகளில் நடைபெற்ற சோதனைகளுக்கு பிறகு, அப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் தொழிலாளர்களின் வீடுகளிலும் சோதனை நடக்குமா என்ற பயத்தில் அவர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.