நடிகர் மற்றும் இயக்குனர் மாதவன் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பல படங்களில் நடித்தவர். 1990களில் ஹிந்தி சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்தாலும், 2000ஆம் ஆண்டு வெளிவந்த ‘அலைபாயுதே’ படம் மூலம் கதாநாயகனாக திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார்.
தற்போது மாதவன் திரைத்துறையில் அடியெடுத்து 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். சமீபத்தில் மாதவன் அளித்த ஒரு பேட்டியில், தனது பயம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது, “என் சினிமா வாழ்க்கையில் இரண்டு விஷயங்களுக்கு நான் பயந்திருக்கிறேன். ஒன்று, முதல் நாள் படப்பிடிப்பு எப்போது துவங்குகிறதோ அப்போது, மற்றொன்று, இரண்டாவது படம் ரிலீஸ் ஆகும் நாள்.
இந்த சூழ்நிலையில், 25 ஆண்டுகள் திரைத்துறையில் பயணம் செய்வது எளிதான விஷயம் இல்லை. மக்களின் ஆதரவே என்னை தொடர்ந்து இத்துறையில் செயல்பட வைக்கிறது என்று அவர் தெரிவித்தார்.