Monday, January 20, 2025

என்னுடைய உதடுகளை பார்த்து பலரும் கேலி கிண்டல் செய்தனர்… நடிகை பூமிகா சாவ்லா OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் விஜய் நடித்த ‛பத்ரி’ என்ற படத்தில் அறிமுகமானவர் பூமிகா. அதன்பிறகு ‛ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். சமீபகாலமாக கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் திரைக்கு வந்த பிரதர் படத்தில் அவரது அக்கா வேடத்தில் நடித்திருந்தார் பூமிகா.

இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛நான் படிக்கிற காலத்தில் என்னுடைய பெரிய உதடுகளை பார்த்து பலரும் கேலி, கிண்டல் செய்தார்கள். அதைக் கேட்டு வேதனை அடைந்து கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். 

ஆனால் அப்படி பலரும் கிண்டல் செய்த அந்த பெரிய உதடுகள்தான் சினிமாவுக்கு வந்த பிறகு ரசிகர்களை கவர்ந்து இழுத்தது. என் உதடுகளை ரசிகர்கள் வர்ணித்து கடிதம் எழுதினார்கள். அதனால் சினிமாவில் அதுவே எனக்கு ஒரு அடையாளமாகவும் மாறி விட்டது” என்கிறார் பூமிகா.

- Advertisement -

Read more

Local News