Monday, January 20, 2025

‘யாத்திசை’ இயக்குனரின் அடுத்த படைப்பு… பூஜையுடன் தொடக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த 2023ம் ஆண்டில் அறிமுக இயக்குனர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் பல புதுமுகங்களைக் கொண்டு வெளிவந்த படம் ‘யாத்திசை’. குறைந்த பட்ஜெட்டில் ஒரு பிரமாண்ட வரலாற்று படத்தை இயக்கி, அசத்தினார். விமர்சகர்கள் மத்தியிலும் இந்த படத்திற்கு பாராட்டுகள் கிடைத்தன. இருப்பினும் அதன் பிறகு தரணி ராஜேந்திரனின் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் ஜே.கே புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் புதிய பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் நடிகை பவானி ஸ்ரீ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை நிகழ்வு சென்னையில் நடந்தது. படம் பற்றிய மற்ற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News