Monday, January 20, 2025

இயக்குனர் அவதாரம் எடுத்த நடிகை தேவயானி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருபவர் நடிகை தேவயானி. 100 படங்களில் நடித்துள்ள இவர் முதன்முறையாக ‘கைக்குட்டை ராணி’ என்ற குறும்படத்தை இயக்கி, தயாரித்துள்ளார். நிஹாரிகா வி.கே. மற்றும் நவீன் என் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்க, பி. லெனின் படத்தொகுப்பு செய்துள்ளார்.சுமார் இருபது நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் குழந்தைகளின் உணர்வுகளை திரையில் சொல்கிறது. தாயை இழந்த, தந்தை வெளியூரில் பணிபுரியும் ஒரு பெண் குழந்தை எத்தகைய சிக்கல்களை சந்திக்கிறது என்பதை உணர்ச்சிப்பூர்வமாக இப்படம் வெளிப்படுத்தியுள்ளது. இந்த குறும்படம் 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது.

- Advertisement -

Read more

Local News