பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா, தனது திறமையால் நடிகையாக மாறி கமல்ஹாசன், தனுஷ், விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது, மிஸ்கின் இயக்கிய பிசாசு 2 படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் வேலைகள் முடிந்து, தற்போது படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.
செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தியுடன் வரலாற்று ஆராய்ச்சியாளராக நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததுடன் மட்டுமல்லாமல், “உன் மேல ஆசைதான்” பாடலை தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து பாடியிருந்தார். அந்த பாடல் பெரும் வெற்றி பெற்றது மற்றும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. அதன் பின்னர் மங்காத்தா, விஸ்வரூபம், உத்தம வில்லன், ஜீவா நடித்த என்றென்றும் புன்னகை, சுந்தர் சி நடித்த அரண்மனை உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பு மற்றும் இசை நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா, இன்ஸ்டாகிராமில் தனது பாலோவர்களை மகிழ்விக்க அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக உள்ளது. தற்போது, வெளிநாட்டில் ஜாலியாக பொழுதை கழித்து வரும் ஆண்ட்ரியா, தனது அனுபவங்களின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.