சுந்தர் சி இயக்கத்தில் வெளியான “மத கஜ ராஜா” திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்து, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நித்தின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை விஷால் பிலிம் ஃபேக்டரி மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட் இணைந்து தயாரித்துள்ளன.படத்தின் வெற்றி ரசிகர்களிடையே பெரும் திருப்தியை ஏற்படுத்தியதோடு, அதன் வெற்றியை கொண்டாடும் விதமாக, இன்று படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
சுந்தர் சி செய்தியாளர்களை சந்தித்தபோது, சுந்தர் சி, நான் இயக்கும் திரைப்படங்களை மக்கள் ரசிப்பார்கள், வணிக ரீதியாக வெற்றி பெறும். ஆனால் எனது மனதில் ஒரு சிறிய வருத்தம் இருந்து கொண்டே இருக்கும். நல்ல இயக்குனர்களின் பட்டியலை எடுத்தால், அந்த பட்டியலில் நான் இருக்க மாட்டேன், இதுவரை பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும் எனக்கு பெரிதாக அங்கீகாரமோ பாராட்டோ கிடைத்தது கிடையாது. சினிமா என்பது ஒரு மிகப்பெரிய தொழில்துறை. இதில் பலரின் வாழ்க்கை சம்பந்தப்பட்டிருக்கிறது. எனக்கு முக்கியமாக தோன்றுவது, மக்கள் அவர்களின் பணத்தை சினிமாவுக்கு கொடுக்கும்போது மூன்று மணி நேரம் அவர்களுக்கு நல்ல படத்தை கொடுக்கவேண்டும் என்பதே என் எண்ணமாக இருக்கும் என்று பகிர்ந்துள்ளார்.