மலையாள சினிமாவில் இயக்குனராகவும் பிரபல நடிகராகவும் அறியப்படும் பசில் ஜோசப், கோதா மற்றும் மின்னல் முரளி போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது அவர் நடிகர் சூர்யாவிடம் புதிய திரைப்படத்திற்கான ஒரு கதையை எடுத்துரைத்துள்ளார். இந்தக் கதை ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படம் எனக் கூறப்படுகிறது.
இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சூர்யா தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படமும் சூர்யாவின் பட்டியலில் உள்ளது. இந்த படங்களை முடித்த பிறகு, சூர்யா பசில் ஜோசப்பின் கதையில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவை தவிர, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.