Thursday, January 16, 2025

குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடி நடிகர் சூரி பகிர்ந்த வீடியோ வைரல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, இன்று கதாநாயகனாகவும் கதையின் நாயகனாகவும் உயர்ந்து நிற்கும் நடிகர் சூரி. காமெடியனாக பல படங்களில் நடித்ததன் பின்னர், கதாநாயகனாகவும் கதையின் முக்கிய பாத்திரமாகவும் நடித்துள்ள படங்கள் இதுவரை நான்கு. தன் அசத்தலான நடிப்பால் மாபெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளார் சூரி.

இந்த நிலையில், சூரி இந்த முறை பொங்கல் பண்டிகையை தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் கொண்டாடினார். இதுபற்றிய தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், தனது குடும்பத்தினருடனும் உறவினர்களுடனும் இணைந்து பொங்கல் வைத்ததுடன், வீட்டு வாசலில் கால் பந்து விளையாடி மகிழ்ந்த தருணங்களையும் பகிர்ந்துள்ளார். அனைவரும் ஒரே மாதிரியான புத்தாடைகளை அணிந்து, மகிழ்ச்சியுடன் இருப்பது வீடியோவில் தெளிவாகக் காணப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News