Thursday, January 16, 2025

சின்ன திரையில் என்ட்ரி கொடுக்கும் அழகிய லைலா நடிகை ரம்பா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக கலகலப்பாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. 1990-களில் டாப் நடிகையாக திகழ்ந்த ரம்பா, 2010 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகி விட்டார். பின்னர் அவ்வப்போது சென்னை வந்து, டிவி சின்னத்திரை நிகழ்ச்சிகளில், குறிப்பாக நடன நிகழ்ச்சிகளில், நடுவராக பணியாற்றி வந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் ஹிட்டான ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியின் முதல் சீசனில், சாண்டி மாஸ்டர், ஸ்ரீதேவி, மீனா ஆகியோர் நடுவராக பங்கேற்றனர். தற்போது அதன் இரண்டாவது சீசன் ஆரம்பமாகவுள்ளது. இதில் ரம்பா நடுவராக பங்கேற்க உள்ளார் என்பதற்கான தகவல் புரோமோவில் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும் அழகுடன் ஜொலிக்கும் ரம்பாவை திரையில் பார்த்த ரசிகர்கள், “ரம்பா சார்” என கமெண்டுகள் மூலம் அவரது ரீ-என்ட்ரிக்கு வெகுவாக வரவேற்பளித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News