Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

நேரடியாக ஓடிடியில் வெளியாகிறதா நயன்தாராவின் ‘டெஸ்ட்’ திரைப்படம்? #TEST

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல நடிகையான நயன்தாராவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் அன்னபூரணி. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

அதன்பிறகு கடந்த ஆண்டு நயன்தாராவின் திருமண ஆவணப்படம் ஓடிடியில் வெளியானது. அவர் நடிப்பில் உருவாகியுள்ள எந்த படமும் இதற்கு பின்னர் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது நயன்தாராவின் கைவசம் டெஸ்ட், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, டியட் ஸ்டூடண்ட்ஸ், டாக்ஸிக், ராக்காயி என பல படங்கள் உள்ளன.

இதில் மாதவன், சித்தார்த்துடன் இணைந்து அவர் நடித்திருக்கும் டெஸ்ட் என்ற படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.தயாரிப்பாளரான சசிகாந்த் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இம்மாதம் இறுதியில் இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

Read more

Local News