Wednesday, January 15, 2025

கேம் சேஞ்சர் படத்தை தொடர்ந்து ரிலீஸூக்கு தயாராகிவரும் ராம் சரணின் RC16… வெளியான நியூ அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், தனது 16வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக “ஆர்.சி 16” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். ராம் சரண் நடிப்பில் சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி உள்ள கேம் சேன்ஜர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ராம் சரணுடன் ஜான்வி கபூர் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தை இயக்குனர் புச்சி பாபு இயக்க, இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் பணிபுரிகிறார். இந்தப் படம் ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது. படப்பிடிப்பு தற்போது மைசூரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜயதசமி தினமான அக்டோபர் 2 அன்று இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மறுபுறம், ராம் சரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ படத்தைப் பற்றிய விமர்சனங்கள் கலவையாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News