Wednesday, January 15, 2025

மீண்டும் இணைந்த திருச்சிற்றம்பலம் பட காம்போ… கிராமத்து பெண் கெட்டப்பில் நித்யா மேனன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷ் தற்போது ‘இட்லி கடை’ என்ற புதிய படத்தை இயக்கி நடித்து வருகிறார். ‘டான் பிக்சர்ஸ்’, ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’, ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ ஆகிய நிறுவனங்கள் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கான இசையை ஜி.வி. பிரகாஷ் அமைத்துள்ளார்.

இந்த படத்திலிருந்து ஏற்கனவே ராஜ்கிரண் போஸ்டர் வெளியிடப்பட்டது. தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி, ‘இட்லி கடை’ படத்தின் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தனுஷ் மற்றும் நித்யா மேனன் கிராமத்து கெட்டப்பில் உள்ள போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதற்கு முன் திருச்சிற்றம்பலம் படத்தில் இவர்கள் காம்போ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News