Touring Talkies
100% Cinema

Wednesday, September 10, 2025

Touring Talkies

சத்தமில்லாமல் வசூல் சாதனை செய்துவரும் டோவினோ மற்றும் த்ரிஷாவின் ‘ஐடென்டிட்டி ‘ #IDENTITY

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷா மற்றும் மலையாள முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் இணைந்து நடித்துள்ள படம் ‘ஐடென்டிட்டி’. இதில் வினய் ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அகில் பால் மற்றும் அனஸ்கான் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர். இவர்களின் கூட்டணியில் 2020-ம் ஆண்டு வெளியான ‘பாரின்ஸிக்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால், ‘ஐடென்டிட்டி’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இப்படத்தினை ராகம் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்தில் டோவினோ தாமஸ் இரு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கதை மருத்துவத்துறையில் நடக்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

திரிஷா ஒரு குற்றத்தை நேரில் காண்கிறார். அதனால் குற்றவாளியை கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவுகிறார். காவல்துறைக் குழுவில் டோவினோ தாமஸ் ஒரு படம் வரையும் ஆளாக இருக்கிறார். குற்றவாளி யார்? அந்த குற்றத்தின் பின்னணி என்ன? என்பதையே திரைக்கதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.இப்படம் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சமீபத்தில், படக்குழு மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டது. படம் வெளியான முதல் 10 நாட்களில் உலகளவில் ரூ.32 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News