Touring Talkies
100% Cinema

Saturday, October 4, 2025

Touring Talkies

இனி என் பெயர் ஜெயம்ரவி அல்ல… ரவி அல்லது ரவி மோகன் என அழையுங்கள்… ஜெயம்ரவி வெளியிட்ட திடீர் அறிக்கை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படம் நாளை ரிலீசாக உள்ளது. இதில் நித்யா மேனன் நாயகியாக நடித்துள்ளார். கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். இந்த நிலையில் தன்னை இனிமேல் ரவி அல்லது ரவி மோகன் என அழைக்குமாறு வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார் ஜெயம் ரவி.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்த நாள் தொடங்கி, நான் ரவி அல்லது ரவி மோகன் என்று அழைக்கப்பட விரும்புகிறேன். இந்த பெயர் என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை கனவுகளை முன்னோக்கி எடுத்து செல்லும். என் கனவு மற்றும் மதிப்புகளுடன் புதிய பயணத்தை தொடங்கும் என்னை இந்த பெயரிலேயே அனைவரும் அழைக்குமாரும், ஜெயம் ரவி என்ற பெயரில் இனிவரும் காலங்களில் அழைக்க வேண்டாம் என்றும் அன்போது கேட்டுக் கொள்கிறேன்.

திரைத்துறை மீது நான் கொண்டுள்ள அளவற்ற அன்பின் பாத்திரமாக, ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளேன். எனக்கு ஆதரவளித்த சமூகத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய, என் ரசிகர் மன்றத்தை பிறருக்கு உதவும் வகையில் ‘ரவி மோகன் ரசிகர்கள் அறக்கட்டளையாக’ மாற்றப்படுகிறது. தமிழ் மக்கள் ஆசியுடன், என் ரசிகர்கள், ஊடகத்தினர் மற்றும் அனைவரையும் மேலே குறிப்பிட்டுள்ளதை போன்றே என்னை அழைக்குமாறும், புதிய துவக்கத்திற்கு தங்களது ஆதரவை வழங்குமாறும் பனிவோடு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News