ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட, ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். தற்போது அவர் சூர்யாவின் ரெட்ரோ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் மே 1-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் ஸ்டோன் பென்ச் என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களையும், வெப் தொடர்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில், ஸ்டோன் பென்ச் நிறுவனத்தின் 16வது படம் பற்றிய அறிவிப்பு இன்று (ஜனவரி 13) வெளியானது. பெருசு எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் வயதான ஒருவரின் இறுதி சடங்கை மையமாகக் கொண்டு முழுநீள காமெடியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வைபவ் மற்றும் அவரது சகோதரர் சுனில் நடித்துள்ளனர். இப்படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார்.