Monday, January 13, 2025

அஜித்தின் பில்லா 3 உருவாகுமா? இயக்குனர் விஷ்ணுவர்தன் சொன்ன பதில்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தற்போது “விடாமுயற்சி” மற்றும் “குட் பேட் அக்லி” ஆகிய படங்களை முடித்துள்ள அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குவார்கள் என்பது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

சிலர், அஜித்துடன் “பில்லா” மற்றும் “ஆரம்பம்” போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் மீண்டும் இணைவாரா என்று எதிர்பார்க்கின்றனர். தற்போது, அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியை வைத்து “நேசிப்பாயா” படத்தை இயக்கியுள்ள விஷ்ணுவர்தன், அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, அஜித்தின் அடுத்த படத்தை அவர் இயக்குவாரா, “பில்லா 3” உருவாகுமா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு விஷ்ணுவர்தன் பதிலளிக்கையில், “’பில்லா 3′ படத்திற்கு வாய்ப்பே இல்லை. ஆனால், அஜித்துடன் புதிய படம் செய்யும் பேச்சு நடந்து வருகிறது. அதில் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்துள்ளார், என்றார். இந்த தகவல் அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. “பில்லா” மற்றும் “ஆரம்பம்” படங்களை விஷ்ணுவர்தன் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News