கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் “காதலிக்க நேரமில்லை”. இதில் நாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். சமீப காலமாக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் ஜெயம் ரவி, குடும்ப பிரச்னைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால், இந்தப் படத்தின் வெற்றியை அவர் மிகவும் எதிர்பார்க்கிறார். விரைவில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.
இந்த படத்தில் குறிப்பிடத்தக்கவகையில், டைட்டில் கார்டில் முதலில் நித்யா மேனனின் பெயரும் பின்னர் ஜெயம் ரவியின் பெயரும் இடம்பெறுகிறது. இது குறித்து ஜெயம் ரவி கூறுகையில், வழக்கமான முறையை பின்பற்றாமல், மாற்றுத்திறனுடன் செயல்பட வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்தோம். எனது மீதுள்ள தன்னம்பிக்கையும் இதற்குக் காரணம். ஹிந்தி நடிகர் ஷாருக்கானும் இதே முறையை பின்பற்றியவர். அவரிடம் இருந்து தான் நான் இதை கற்றுக் கொண்டேன் என்றார்.