தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை பெற்றுள்ளது. இந்நிலையில், பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியை மும்பையில் உள்ள அவரது அலுவலகத்தில் அல்லு அர்ஜுன் சந்தித்திருக்கிறார்.
அல்லு அர்ஜுன் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி பல மாதங்களாக ஒரு புதிய திரைப்படத்தைத் தொடங்குவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய சந்திப்பு இதற்கான முக்கிய அங்கமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், “அல்லு அர்ஜுன் பாலிவுட் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறாரா?” என்ற கேள்வி இணையத்தில் பரவலாக விவாதிக்கப்படுகிறது.
சஞ்சய் லீலா பன்சாலி தற்போது ஆலியா பட், ரன்பீர் கபூர் மற்றும் விக்கி கவுஷல் ஆகியோருடன் லவ் அண்ட் வார் என்ற புதிய படத்தில் பணியாற்றி வருகிறார். அதேசமயம், அல்லு அர்ஜுன் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.