நடிகர் அஜித் குமார், “அஜித்குமார் ரேசிங்” என்ற பெயரில் புதிய கார் பந்தய அணியை உருவாக்கியுள்ளார். தற்போது அவர் கார் பந்தயத்திற்கான பயிற்சிகளில் முழு தீவிரத்துடன் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் துபாய் சென்று, அங்கு கார் பந்தய பயிற்சியில் கலந்துகொண்டார்.
பயிற்சியின் போது அவர் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக அவர் எந்த காயமும் இல்லாமல் உயிர் தப்பினார். இந்த சம்பவத்திற்குப் பிறகும், பயிற்சியை தொடர்ந்த அவர், மேலும் நிறுத்தமின்றி தனது ரேசிங் பயணத்தை முன்னேற்றி வருகிறார்.
இந்நிலையில், கார் ரேஸ் வீரராக போட்டிகளில் பங்கேற்பது குறித்து நடிகர் அஜித் ஒரு பேட்டியில் அவரது கருத்து தெரிவித்துள்ளார். அதில், “திரைப்படங்களில் நடிக்க வேண்டியிருந்ததால், இதுவரை ரேஸ் போட்டிகளில் முழுமையாக பங்கேற்க முடியவில்லை. ஆனால் நடப்பு கார் பந்தய தொடர் முடியும் வரை நான் எந்த திரைப்படங்களிலும் நடிக்க போவதில்லை.நான் இப்போது ஒரு கார் பந்தய ஓட்டுநராக மட்டும் அல்ல, ரேஸ் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறேன் சாதிக்க விரும்புகிறேன் என்றுள்ளார். இந்நிலையில் கார் ரேஸ் தொடர் நடக்காத காலங்களான, குறிப்பாக அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை திரைப்படங்களில் அஜித் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.