Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

விக்ரமின் 63ல் கதாநாயகியாக இணைய போவது யார்? வெளியான புது தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“மண்டேலா” மற்றும் “மாவீரன்” படங்களை இயக்கிய மடோன் அஸ்வின், தனது புதிய படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இது விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாக உள்ளது. இந்தப் படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. ஆரம்பத்தில் இப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவரது கால்ஷீட் பிரச்சினையால் சாய் பல்லவி இதில் நடிக்க முடியாமல் போனார்.

தற்போது இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா மோகன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகிய இருவருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீநிதி ஷெட்டி, ஏற்கனவே விக்ரமுடன் “கோப்ரா” படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

Read more

Local News