ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக சாய் அபயன்கர் பணியாற்றுகிறார்.
இந்தப் படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்கின்றார். மேலும், சுவாசிகா, நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ், மற்றும் சிவதா போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துக் கொள்கிறார்கள்.
ஏற்கனவே இப்படத்தில் பல மலையாள பிரபலங்கள் இணைந்து நடித்து வருகிறார்கள். இந்நிலையில், மலையாள நடிகர் அஜூ வர்கீஸ் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜூ வர்கீஸ், “வருஷங்களுக்கு சேஷம்,” “ஹோம்,” மற்றும் “மின்னல் முரளி” போன்ற புகழ்பெற்ற மலையாள திரைப்படங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.