பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதில் நடித்த பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் போன்ற நடிகர்களின் கதாபாத்திரங்கள் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகின.
இந்த வெற்றியின் பின்னர், சமீபத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ இரண்டாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.இந்தப் படத்தினை நாட்ஸ் ஸ்டுடியோஸ், நீலம் புரொடக்சன்ஸ், தி ஷோ பீபுள் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என நடிகர் ஆர்யா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், தனது துணை இயக்குநரின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பா.இரஞ்சித், தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்:
“‘சார்பட்டா பரம்பரை 2’ படத்தின் இறுதிக் காட்சியை எழுதி முடித்துள்ளேன். ஒரு திரைப்படத்தை எழுதி முடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஏற்கனவே திரைக்கதை ஆசிரியர் தமிழ்ப் பிரபா இந்தக் கதைச்சுருக்கத்தை ஒரு முறை எழுதியுள்ளார். ஆனால், என் பாணியில் அதை மறுபடியும் எழுதிப் பார்த்தேன். தற்போது அது ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தை எழுதும் பொழுது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை, என் துணை இயக்குநர் தனது புத்தகத்தை எழுதிக் கொண்டிருந்தபோது அவருடைய முகத்திலும் கண்டேன்,”** என அவர் கூறினார்.