கவுதம் வாசுதேவன் தனது முதல் மலையாள திரைப்படமாக ‘டாமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தை மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்முட்டி தயாரித்து, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன், சுஷ்மிதா பட், கோகுல் சுரேஷ் மற்றும் லீனா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது, தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த திரைப்படம் வரும் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் மம்முட்டி தனியார் துப்பறிவாளராக நடிக்கிறார். இளம் பெண்கள் மாயமாகும் வழக்கில், ஒரு பெண்ணின் பர்ஸில் இருந்து கண்டிப்பதற்கான ஆதாரங்களைப் பயன்படுத்தி மம்முட்டி அதனை எப்படி தீர்க்கிறார் என்பது தான் இப்படத்தின் மையக்கதை. குறுகிய காலத்தில் மற்றும் சிறிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம், ஒரு கொரியன் திரைப்படத்தின் தழுவலாக இருக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.