Thursday, January 9, 2025

‘பிரபாஸ்-ன் தி ராஜா சாப்’ படத்தில் ஜப்பான் ரசிகர்களுக்கென தமன் செய்த ஸ்பெஷல் பாடல்…. கசிந்த தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘கல்கி’ படத்திற்குப் பிறகு, நடிகர் பிரபாஸ் தற்போது மூன்று அல்லது நான்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவற்றில் ‘ஸ்பிரிட்’ மற்றும் ‘ராஜா சாப்’ ஆகியவை குறிப்பிடத்தக்க படங்களாகும். ‘ராஜா சாப்’ படத்தை இயக்குநர் மாருதி இயக்கி வருகிறார், மற்றும் இப்படத்திற்கான இசையை தமன் உருவாக்கி வருகிறார்.

சமீய காலங்களில் பிரபாஸ் நடித்த படங்கள் வெளிநாடுகளில், குறிப்பாக ஜப்பானில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. கடந்த மாதம் ஜப்பானில் வெளியான ‘கல்கி’ திரைப்படமும் இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும். அந்த வெற்றியின் பின்னர், ஜப்பான் ரசிகர்களுடன் பிரபாஸ் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரைப்படத்தை பார்க்க திட்டமிட்டிருந்தார். ஆனால், ‘ராஜா சாப்’ படப்பிடிப்பின் போது அவரது காலில் காயம் ஏற்பட்டதால், அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் சொந்த ஊர் திரும்பினார். இதற்காக அவர் ஜப்பான் ரசிகர்களிடம் தனது வருத்தத்தைத் தெரிவித்து மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில், ஜப்பான் ரசிகர்கள் மீது உள்ள அன்பிற்கும், வணிக ரீதியான திட்டமாகவும், ‘ராஜா சாப்’ படத்தில் ஜப்பான் ரசிகர்களுக்கென தனிப்பாடல் ஒன்றை தமன் இசையமைத்துள்ளார், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜப்பானில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனை இசையமைப்பாளர் தமன் தான் சமீபத்தில் உறுதிப்படுத்தினார்.

- Advertisement -

Read more

Local News