Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

விபத்தை எல்லாம் தூசியாய் தட்டிவிட்டு மீண்டும் தீவிர கார் பந்தய பயிற்சியில் ஈடுபட்டுள்ள நடிகர் அஜித்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அஜித் குமார், மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில், ‘அஜித் குமார் ரேசிங்’ என்ற பெயரில் புதிய கார் ரேசிங் அணியை உருவாக்கிய அஜித், தற்போது அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் துபாய் சென்று ரேஸிங் பயிற்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. விபத்தில், அஜித்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல், அவர் உயிர் தப்பினார். ஆனால், கார் முன்பகுதி மிகுந்த சேதம் அடைந்தது.

இந்த நிலையில், கார் பந்தய பயிற்சியில் விபத்து ஏற்பட்டதற்குப் பிறகு, இன்று நடந்த இரண்டு கட்ட தகுதிச் சுற்றிலும் அஜித் குமார் பங்கேற்று கார் ஓட்டினார். நாளை நடக்கும் கார் அணிவகுப்பிலும் அவர் பங்கேற்பார் என அவரது மேலாளர் உறுதியளித்துள்ளார். மேலும் அவர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள போது எடுக்கப்பட்ட ஏராளமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News